பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: பயனடைந்த 600 பேர்! - படித்த ஏழை பெண்கள்
பெரம்பலூர்: சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 600 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
welfare assistance
பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை என நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 600 பயனாளிகளுக்கு மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டன.