தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளை அகற்றிடுக: பொதுமக்கள் கோரிக்கை! - துறைமங்கலம்

பெரம்பலூர்: துறைமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

durai mangalam

By

Published : Oct 23, 2019, 11:10 AM IST

பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மைய நூலகம் மற்றும், வேளாண் அலுவலகம் என பல்வேறு மக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களும், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

அவ்வாறு சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்து பாட்டில்கள், துணிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சாலையருகே கொட்டப்படுகிறது.

சாலையின் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

இதனால், இங்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு மேலும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் நோய்கள் பரப்பக் கூடிய மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை

ABOUT THE AUTHOR

...view details