தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த வடமாநிலத்தவர்

பெரம்பலூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் 21 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்.

Man rejoins with family
Man rejoins with family

By

Published : Jan 8, 2020, 10:50 AM IST

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூரில் மனநலம் பாதிக்கப்பட்டு பாபு சிங்க என்பவர் சாலையில் சுற்றித்திரிந்தார். 2015ஆம் ஆண்டு பெரம்பலூரில் செயல்பட்டுவரும் வேலா கருணை இல்லம் மூலம் மீட்கப்பட்ட பாபு சிங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைபெற்ற பின்பு பாபு சிங் அளித்த தகவலின் அடிப்படையில் அவர் வீட்டாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பின் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து அவரது மகன் அஜ்ரம், கன்டி ஆகியோர் வரவழைக்கப்பட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலையில் பாபு சிங் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டை விட்டு வந்தவர் குடும்பத்துடன் இணைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் கருணை இல்ல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: '14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன்' - 'சூல்' எழுத்தாளர் சோ.தர்மன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details