தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவிலக்கு விழிப்புணர்வு போட்டி - கல்லூரி மாணவர்கள் அசத்தல்! - மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை

பெரம்பலூர்: மதுபானங்கள், கள்ள சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

liquor awarness competition
liquor awarness competition

By

Published : Feb 7, 2020, 9:15 AM IST

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் மது பானங்கள், கள்ள சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

மாவட்டத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். மதுவிலக்கு, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓவியப்போட்டி, கோலப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவை நடைபெற்றன.

மதுவிலக்கு விழிப்புணர்வு போட்டி

இந்தப் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் சோபா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details