தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி! - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர்: நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

By

Published : Jul 22, 2019, 8:14 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையறிந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பது தெரியவந்தது. மேலும் இவர் கணவரை இழந்ததால், அரசு சார்பில் அரும்பாவூர் ஏரிக்கரையை ஒட்டி இரண்டே முக்கால் சென்ட் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

இதனையடுத்து அந்த நிலத்தை அதேப் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து பலமுறை ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் விரக்திரயடைந்த தமிழரசி இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details