தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆய்வக உதவியாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு - road accident news in Tamil

பெரம்பலூர்: அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உயிரிழப்பு
சாலை விபத்தில் உயிரிழப்பு

By

Published : Jan 26, 2021, 6:00 PM IST

பெரம்பலூர் நகர்புறத்திற்கு உட்பட்ட அரணாரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (40). இவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் பணி முடித்துக்கொண்டு அரணாரை பகுதிக்கு சென்றபோது பெரம்பலூர் - துறையூர் சாலை செஞ்சேரி அருகே சாலையோரத்தில் உள்ள மரத்தில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ்கண்ணன் உயிரிழந்தார்.

விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details