தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 12 மூட்டை குட்கா பறிமுதல்! - 12 மூட்டிகள் குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்: அரியலூர் நெடுஞ்சாலையில் பேரளி அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து 12 மூட்டைகள் குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

By

Published : Dec 4, 2019, 10:57 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. அதே பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் போமா ராம். இருவரும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஸ்கார்பியோ காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் சென்றுள்ளனர்.

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரள அருகே வேகமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பின்னர், காரில் சென்ற இருவரும் காவல் துறையினர் வருவதற்குள் காரிலிருந்த 12 மூட்டைகள் குட்காவை அருகிலுள்ள ஓர் இடத்தில் மறைத்து வைத்துள்ளனர்.

விபத்துக்குள்ளான கார்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருவத்தூர் காவல் துறையினர், விபத்துக்குள்ளான காரை மீட்டு அதில் வந்த இருவரிடமும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரனாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தியதில், இருவரும் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கார்

பின்னர், இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள மறைத்து வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு இரண்டரை லட்சம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:லாரி மோதிய விபத்து... தந்தை கண்முன்னே உயிரிழந்த மகள்!

ABOUT THE AUTHOR

...view details