தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளிக் கொலுசுகள் திருடியவர்கள் மூன்றாம் கண்ணில் சிக்கினர்! - பெரம்பலூர் மாவட்டத்தில் கொலுசு திருடிய பெண்கள்

பெரம்பலூர்: நகைக் கடையில் ஒரு கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடிய மூன்று பெண்களை கண்காணிப்புக் கேமராவின் மூலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

கொலுசு திருடிய பெண்கள்

By

Published : Nov 18, 2019, 7:02 PM IST

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரகமத்துல்லா மகன் முகமது இப்ராஹிம். இவர் வாலிகண்டபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 19ஆம் தேதி நகைக்கடைக்குச் சென்ற கும்பல் ஒன்று நகை வாங்குவது போல நடித்து, உரிமையாளர், நகைக்கடை பணியாளர்களின் கவனத்தை திசைதிருப்பி 11 ஜோடி வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்றது.

அதனைத் தொடர்ந்து முகமது இப்ராஹிம், மங்கலமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்ட விசாரணையாக கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையை நகர்த்தினர்.

கொலுசு திருடிய பெண்கள்

இதில், வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்றது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வைரம், முத்துக்கண்ணு, தமிழ்ச்செல்வி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மங்களமேடு காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.

திருடர்களை கைது செய்த மங்களமேடு காவல் துறையினர்

இதையும் படிங்க : கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - மூன்றாவது முறையாக கொள்ளையர்கள் கைவரிசை!

ABOUT THE AUTHOR

...view details