தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்கு நன்றி- பெரம்பலூரில் வெற்றிபெற்ற பாரிவேந்தர் பேட்டி - parivendhar

பெரம்பலூர்: மக்களவைத் தேர்தலில் தன்னை தேர்தெடுத்த வாக்காள பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

By

Published : May 24, 2019, 10:48 AM IST

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், "திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட என்னை சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்காளர்களுக்கு நன்றி- ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

அதே சமயத்தில் வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக் கட்சிகள், கட்சித் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்" என்றார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு வெற்றிக்கான சான்றிதழை, மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details