பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்மாநில தலைவர் சௌவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் தமது குடும்பத்துடன் சென்று நூறு சதவீத வாக்குப்பதிவை செய்ய வேண்டும், சுருக்கெழுத்து, தட்டச்சு நிலையிலுள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்காக விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், பதவி உயர்வு பட்டியலை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் தேர்தல் கமிஷனில் இருந்து விதிவிலக்கு பெற்று உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
குடும்பத்தோடு சென்று வாக்களிக்க கூட்டுறவுத் துறை ஊழியர்கள் முடிவு! - தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம்
பெரம்பலூர்: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் குடும்பத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்கள் பெரியசாமி மற்றும் கோவிந்தராஜ், மாநில பொருளாளர் ஸ்டாலின் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.