பெரம்பலூர்:தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
நிதி வழங்கிய அரசு பள்ளி ஆசிரிய தம்பதி
அந்த வகையில் பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பகுதியில் வசிக்கும் ஆசிரிய தம்பதிகளான நடராஜன், முத்துக்கண்ணு ஆகியோர், முதலமைச்சர் கரோனா தொற்று நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்ய விரும்பினர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம், தங்களது சொந்தப் பணம் 25 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளனர்.
அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக நடராஜ் பணிபுரிந்து வருவதும், இவரது மனைவி முத்துக்கண்ணு, இடைநிலை ஆசிரியராக கோனேரி பாளையம் அரசு பள்ளியில் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு