பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சித்தளி அருகே ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார், சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்ற சுரேஷ்குமார் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் கவலைக்கிடம் - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: சித்தளி அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் முலம் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மூவரையும் பெரம்பலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனம் முன்புறம் சென்ற லாரியை அதிவேகத்தில் முந்திச் செல்லும்போது, எதிர்பாராமல் எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.