பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். இவர் தனது வயல் அருகே உள்ள தென்னந்தோப்பில் 12 மயில்கள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
விவசாய நிலத்தில் இறந்துகிடந்த மயில்கள் - 12 மயில்கள் உயிரிழப்பு
பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே விவசாய நிலத்தில் இறந்துகிடந்த 12 மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Peacocks dead in perambalur
இதனையடுத்து வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன், வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயில்களை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்ட பின்பு அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.
மயில்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Sep 17, 2020, 1:38 AM IST