தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென ஏற்பட்ட தீ விபத்து: காடுகள் நாசம்! - marudhai river

பெரம்பலூர்: மருதையாறு ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் திடீரென பரவிய தீயால் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகின.

தீ விபத்து

By

Published : Jul 8, 2019, 12:00 AM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் இருக்கிறது சில்லக்குடி கிராமம். இந்த ஊர் அம்மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியாகும். இந்நிலையில், சில்லக்குடி கிராமத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் மருதையாறு ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 8.30 மணிக்கு தீடீரென ஏற்பட்ட தீ அரியலூர் மாவட்டம் வாரணாசி பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதி வரை பரவி அப்பகுதி முழுவதும் தீக்கரைபோல் காட்சியளிக்கின்றன.

தீ விபத்து

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details