தமிழ்நாடு

tamil nadu

அரசுப்பள்ளியில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற உணவுத்திருவிழா!

By

Published : Jan 31, 2023, 6:51 PM IST

பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பெரம்பலூர் மாவட்டம் T.களத்தூர் பகுதி அரசு உயர் நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

அரசுப் பள்ளியில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற உணவுத் திருவிழா
அரசுப் பள்ளியில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற உணவுத் திருவிழா

அரசுப் பள்ளியில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற உணவுத் திருவிழா

பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டம் T.களத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 'பசுமைப் பள்ளி' என்ற பெயரோடு விளங்குகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று நடைபெற்றது. உணவுத் திருவிழாவினை பள்ளி தலைமையாசிரியர் கோ.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த உணவுத் திருவிழாவில் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், பச்சை பயிறு, முளைகட்டிய பயிறு வகைகள்; கம்பு, சோளம், கேழ்வரகு மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், கடலை உருண்டை, தேனும் திணையும், கேழ்வரகு தோசை, பிரண்டை சட்னி, உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த பாரம்பரிய உணவுத் திருவிழா மூலம் துரித உணவு வகைகள் உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளதாகவும், மாணவர்களும் பாரம்பரிய உணவு வகைகள் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எடுத்துக்கொண்ட புதுமுயற்சியாகவும் இந்த உணவுத் திருவிழா விளங்குகிறது. இந்த பாரம்பரிய உணவுத்திருவிழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் 2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details