பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஏரிகள் மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கொட்டரை நீர்த்தேக்க பணிகளையும், சின்னமுத்து அணை திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகளுக்கு 2ஆவது திருமணம்: ரஜினிக்கு பெரியாரின் செயலை நினைவூட்டும் செல்லூர் ராஜு!
கொட்டாய் கிராமத்தில் நீர்த்தேக்கப் பணிகளுக்காக 128 கோடி நிதி ஒதுக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமானப் பணிகள் நடந்தும், பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும், வேப்பந்தட்டை வட்டம் சின்னமுத்து அணை திட்டத்திற்கு, ஆய்விற்காக ரூ.10 லட்சம் அறிவித்து, நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை என்பதையும் முன்னிறுத்தி விவசாயச் சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மேலும், மாநில அரசு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஏரிகள் மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.