பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(மார்ச்.25) விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் வரவில்லை: இதனடிப்படையில், அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதிலிருந்து அலுவலர்கள் மட்டுமே தொடர்ந்து அரசின் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா கூட்டத்திற்கு வரவில்லை.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகளும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், “விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, அதன் பிறகு அலுவலர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் மாறாக அலுவலர்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். இது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார். இது மட்டுமின்றி கூட்டம் முடியும் தருவாயில் வருவது அல்லது கூட்டத்திற்கு வராமல் இருப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்.