விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பெருவாரியான விவசாயிகள் பருவமழையை நம்பியே சாகுபடி செய்கின்றனர். இம்மாவட்டத்தில் சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சிறு தானிய வகைகள் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதனிடையே, இம்மாவட்டத்தில் தற்பொழுது மாற்றுச் சாகுபடியாகக் கேந்தி பூக்கள் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் பந்தல், சிறுவாச்சூர், குரும்பலூர், மேலப்புலியூர் பாளையம், லாடபுரம், கீழ் கணவாய், சத்திர மனை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கேந்தி பூக்கள் தற்போது அதிகளவில் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகின்றன.