தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் அரசு மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

பெரம்பலூர் : தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம்

By

Published : Oct 25, 2019, 4:19 PM IST

அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது. தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை அமல்படுத்துதல், பட்ட மேற்படிப்பில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல், அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.

மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம்

இந்நிலையில், பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 60 மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 60 மருத்துவர்கள் என மொத்தம் 120 அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சைக்காக வரும் சூழ்நிலையில் மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை செவிலியர்கள் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் செவிலியர்கள்

இதேபோல், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களும் வேலை நிறுத்த போராடத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இதையும் படிங்க :‘தமிழர்களின் வேலை தமிழர்களுக்கே’ - மாணவர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details