பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவியின் மகள் பட்டு ரோஜா (வயது 70), இரண்டாவது மனைவியின் மகன் பெருமாள். இவர்களிடம் பூர்வீக சொத்தான மூன்று ஏக்கர் 50 சென்ட் நிலம் இக்கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் கோவிந்தராஜனின் முதல் மனைவியின் மகள் பட்டு ரோஜா, பூர்வீக சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் எனக் கூறி தம்பி பெருமாளிடம் கடந்த சில ஆண்டுகளாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 1987ஆம் ஆண்டு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பட்டு ரோஜாவிற்கும் சொத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதில் பங்கும் இல்லை என எழுதி வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.