பெரம்பலூர் மாவட்டத்தின் பிரசித்திப்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பூஜைகள் நடைபெறும்.
ஆடி முதல் வெள்ளி; சிறுவாச்சூர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு! - prayer
பெரம்பலூர்: பிரசித்திப்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிறுவாச்சூர் திருக்கோயில் பக்தர்கள் தரிசனம்
இந்நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
அருள்மிகு மதுரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்ட பின்னர் தீபாராதனையும் காட்டப்பட்டது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற மாவு இடித்து மாவிளக்கு வழிபாடு செய்தனர்.