தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மக்கள் ஆர்பாட்டம்! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Demonstration in Perambalur demanding housing lease
Demonstration in Perambalur demanding housing lease

By

Published : Feb 8, 2021, 8:57 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு 50 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் இதுவரை ஆட்சி மாறி வந்தாலும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கிடைப்பதில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், “தங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை என்றால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட மக்களாகிய நாங்கள் வாக்களிக்க மாட்டோம். மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” எனக் கூறினர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details