பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பெரிய வடகரை, வெண்பாவூர், களரம்பட்டி, பாடலூர், அன்னமங்கலம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்! - மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்!
பெரம்பலூர்: மான் வேட்டையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இப்பகுதிகளில் மான்வேட்டை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரும்பாவூர் பெரிய ஏரிக்கரை பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த பூமிதானபுரத்தைச் சேர்ந்த அருள் பாண்டி, ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய ரங்கசாமி என்பவரைத் தேடி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி, வேட்டையாட பயன்படுத்தப்பட்ட பொருள், வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடிய மான் உடற்கூறாய்வுக்குப் பிறகு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.