பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை , பிலிமிசை, பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு! - பசு மாடு
பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே இடி தாக்கியதில் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன.
இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு
இதில், திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் இடி தாக்கியதில் உயிரிழந்தன. இது அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இடி தாக்கி 22 ஆடுகள் பரிதாப உயிரிழப்பு