தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிலே பிரசவம் பார்த்த தம்பதி; புகாரளித்த சுகாதாரத்துறையினர்!

பெரம்பலூர்: இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதியை அதிகாரிகள் மிரட்டுவதாக புலம்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

couples threatened in perambalur district
couples threatened in perambalur district

By

Published : May 26, 2020, 11:22 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் நியூகாலனி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் மர செக்கு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேபி (36) நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த மே 17ஆம் தேதி வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துள்ளார்.

பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனிடையே வீட்டிலேயே குழந்தை பிறந்த சம்பவம் குறித்து அறிந்த சுகாதாரத்துறையினர் தாய் பேபியை அழைத்து சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் அவரது உடலில் இரத்தம் குறைவாக இருந்ததாகக்கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமைனக்கு வந்து இரத்தம் ஏற்றிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். ஆனால் தம்பதி அரசு மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளனர். மேலும் சுகாதாரத்துறையினர், வருவாய் துறை அலுவலர்கள், காவல்துறையினர் வந்து தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

வீட்டிலே குழந்தை பெறுவதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களை மிரட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அது தற்போது வைரலாகி வருகிறது. சுகாதாரத்துறையினர் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேர்வு விடைத்தாள் திருத்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details