கரோனா வைரஸ் நோய் தொற்று தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் இதுவரை ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனுக்கும், 46 வயது மதிக்கத்தக்க தலைமை காவலருக்கும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் 672 பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 150 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 522 நபர்களின் ஆய்வு முடிவுகள் விரைவில் வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.