தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்கு கையில் பூமாலை போல் மோடி கையில் நாடு! -முத்தரசன் - state sectretary mutharasan

பெரம்பலூர்: ஒரு குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது என்ன செய்யுமோ அதுபோல இந்த நாடு மோடி கையில் அகப்பட்டவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பெரம்பலூரில் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.

முத்தரசன்

By

Published : Apr 1, 2019, 8:18 AM IST

Updated : Apr 1, 2019, 8:58 AM IST

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூரில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகின்றார். பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு இதில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது என்ன செய்யுமோ அதுபோல இந்த நாடு மோடி கையில் அகப்பட்டுவிட்டது. மேலும் அதிமுக அரசு மற்றும் அதிமுக கட்சியை பாஜக அடிமையாக்கி தான் என்ன சொல்கிறதோ அதை செய்யும் கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் மகத்தான வெற்றிபெறும். மோடி ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகின்றார். இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated : Apr 1, 2019, 8:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details