தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீருக்குள் விஜய் ஓவியம் - கல்லூரி மாணவர் சாதனை - கல்லூரி மாணவர்

பெரம்பலூரில் நீருக்கடியில் எனாமல் பெயிண்ட் மூலம் நடிகர் விஜய் ஒவியத்தை வரைந்து கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

நீருக்குள் விஜய் ஓவியம்
நீருக்குள் விஜய் ஓவியம்

By

Published : Aug 9, 2021, 7:34 AM IST

பெரம்பலூர்:வேப்பந்தட்டை வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் பயின்று வருகிறார்.

இளம் வயதில் இருந்தே ஒவியத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு ஒவியங்களை பல்வேறு பொருள்களை கொண்டு வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இவர், 3 ஆயிரம் முத்தங்களால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒவியம், குறளோவிய புத்தகத்திலுள்ள வரிகளால் கலைஞர் கருணாநிதி ஓவியம், நெல் மணிகளால் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஓவியம், பிரட்டால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

நீருக்குள் விஜய் ஓவியம்

நீருக்குள் விஜய் ஓவியம்

இதனிடையே தற்போது புதிய முயற்சியாக 6 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் எனாமல் பெயிண்ட் மூலம் நடிகர் விஜய்யின் ஒவியத்தை வரைந்துள்ளார். இந்திய அளவில் இதுவரை இந்த சாதனை முயற்சியை யாரும் செய்யவில்லை என நரசிம்மன் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

இந்த ஓவியத்தை இரண்டரை மணி நேரமாக, வெறும் கையால் வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை முயற்சி ‘கலாம் புக் ஆப் ரெக்கார்டு’ சாதனை முயற்சிக்கு அனுப்பபட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவரின் சாதனை முயற்சியை பொதுமக்கள், நண்பர்கள் ஆகியோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூக்கால் ஓவியம் வரைந்த ரசிகர் - சூர்யா நெகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details