பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சித்தளி பகுதியில் பள்ளி மாணவர்கள் குன்னம் அரசு பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள கோயில் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, குன்னத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த ”தனலெஷ்மி சீனிவாசன்” என்னும் தனியார் கல்லூரிப் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றோடு ஒன்று முந்தி செல்வதற்காக முயன்றபோது அருகில் உள்ள மின் கம்பத்தில் இடித்து கோயில் முன்பு பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களின் மீது மோதியது. இதில், பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தனியார் கல்லூரிப் பேருந்து ஏற்படுத்திய விபத்து பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு மாணவியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வேகமாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்துகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இந்த விபத்து குறித்து குன்னம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : நேருக்குநேர் மோதிக்கொண்ட லாரி, ஆம்னிபஸ் விபத்து