தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவி பைக்மீது மோதிய கலெக்டரின் பெற்றோர் கார் - பகீர் சிசிடிவி காட்சிகள்! - கார் பைக் வீடியோ

பெரம்பலூர்: துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனத்தின்மீது, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் வந்த கார் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Collector's Parents Car Crashed on Student Bike, CCTV footage

By

Published : Nov 20, 2019, 11:54 AM IST

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைராஜின் மகள் கீர்த்தனா. பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எட். படித்து வந்த இவர், நேற்று முன்தினம் (நவம்பர் 18) மாலை துறைமங்கலம் பகுதியிலுள்ள தங்கள் விவசாய நிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார்.

துரைமங்கலம் மூன்று ரோடு அருகே கீர்த்தனா வந்தபோது, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் பயணித்த, தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கீர்த்தனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அரியலூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வராஜிடம், பெரம்பலூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் இருசக்கர வாகனத்தின்மீது கார் மோதிய விபத்தில் கீர்த்தனா தூக்கி வீசப்படும் காட்சி பார்க்கவே பயங்கரமாக உள்ளது.

மாணவியின் இருசக்கர வாகனம் மீது மோதிய கார் வீடியோ

இதையும் படிங்க: கார் மோதி தூக்கி எறியப்பட்ட மூதாட்டி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details