தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை' - ஆட்சியர் எச்சரிக்கை - பெரம்பலூர் செய்திகள்

பெரம்பலூர்: உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சாந்தா எச்சரித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 4, 2020, 8:33 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாகுபடிக்கு தேவையான உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தனியார் விற்பனை நிலையங்களில் 1315 டன் யூரியா, 794 டன் டிஏபி, 877 டன் பொட்டாஸ், 4448 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள், ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்ய கூடாது.

சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும்போது, கட்டாயமாக ஆதார் அட்டை கொண்டு கைரேகை பதிவு செய்து உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியான உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லறை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.

விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. ஆய்வின்போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குற்ற வழக்கு தொடரப்படும். இது குறித்து புகார்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலே கூறியிருக்கும் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details