தமிழ்நாடு முழுவதும் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
இதில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயந்தி என்பவரும், சஞ்சீவி என்பவரும் போட்டியிட்டனர். இதில் சஞ்சீவி 419 வாக்குகளும், ஜெயந்தி 429 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.