மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி பெரம்பலூரில் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கடைவீதி, சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்றது.