பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான சங்கு பேட்டையைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர மாணவரணி செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) வல்லத்தரசு. இவர் கடந்த ஜூன் 2ஆம் தேதி பெரம்பலூர் விழா முத்தூர் சாலையோரம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வல்லத்தரசு உடனிருந்து படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அவரது நண்பர் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
இதனிடையே, இந்த கொலை தொடர்பாக நான்கு பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மேலும் இருவரை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பெரம்பலூர் முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ் என்பவரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடிவந்தனர்.