தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் அதிமுக கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றம் - பெரம்பலூர் அண்மைச் செய்திகள்

அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக சசிகலாவுக்கு எதிராகப் பெரம்பலூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்
தீர்மானம்

By

Published : Jun 19, 2021, 11:04 AM IST

பெரம்பலூர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஜூன் 18) நடைபெற்றது.

இது குறித்து ஆர்.டி. ராமச்சந்திரன் பேசுகையில், “இரட்டை தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பாட்டில் அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட்டுவருகிறது, இதனைச் சீர்குலைக்கும் வகையில், அதிமுகவிற்குள்ளே சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துவருகிறார்.

சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை கழகத்திலிருந்து நீக்கியதை வரவேற்கிறோம். மேலும் திமுகவுக்கு சாதகமாகவும், தனது அக்கா மகன் கட்சிக்கு ஆள் சேர்க்கும் வகையில் செயல்படும் சசிகலாவை கண்டித்து பெரம்பலூர் அதிமுகவினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : 'தடுப்பூசி பாரபட்சத்தின் மூலம் திமுக அரசை அடிமையாக்க நினைக்கும் பாஜக' - முத்தரசன்

ABOUT THE AUTHOR

...view details