தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்! - அதிமுக ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் : அதிமுகவின் இளம்பெண்கள், இளைஞர் பாசறை, அம்மா பேரவை ஆகியவற்றின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADMK Advisory Meeting In Perambalur
ADMK Advisory Meeting In Perambalur

By

Published : Aug 27, 2020, 4:09 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் அதிமுகவின் இளம்பெண்கள், இளைஞர் பாசறை, அம்மா பேரவை ஆகியவற்றின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் பொருட்டு, இளம்பெண்கள், இளைஞர் பாசறை, அம்மா பேரவை உள்ளிட்ட அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்க்கையும், ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இதில், பெரம்பலூர் சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்செல்வன், ஒன்றியக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மேலும் புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் படிவமும் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details