தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேமித்து வைத்திருந்த பணத்தை கலைஞர் நூலகத்திற்கு வழங்கிய மாணவி; ஆட்சியர் பாராட்டு - donated to kalaingnar library

4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி படிப்பிற்காக சேகரித்து வைத்திருந்த பணத்தை கலைஞர் நினைவு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்கு உண்டியலுடன் வழங்கினார்

சேமித்து வைத்திருந்த பணத்தை கலைஞர் நூலகத்திற்கு வழங்கிய 9 வயது மாணவி; ஆட்சியர் பாராட்டு
சேமித்து வைத்திருந்த பணத்தை கலைஞர் நூலகத்திற்கு வழங்கிய 9 வயது மாணவி; ஆட்சியர் பாராட்டு

By

Published : Jul 5, 2022, 3:07 PM IST

பெரம்பலூர்: வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகள் ரித்திகா (9). 4ஆம் வகுப்பு படிக்கும் இவர் வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேகரித்து வந்தார்.

மேலும் பள்ளி படிப்பிற்காக சேகரித்து வைத்திருந்த இந்த பணத்தை நேற்று (ஜூலை 4) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியாவிடம் மதுரையில் உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்கு உண்டியலுடன் வழங்கினார்.

சேமித்து வைத்திருந்த பணத்தை கலைஞர் நூலகத்திற்கு வழங்கிய 9 வயது மாணவி; ஆட்சியர் பாராட்டு

மேலும் தான் சேகரித்து வைத்திருந்த தொகையில் வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பீரோ ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியாவிடம் வழங்கினார்.

விவசாயி மகளான இச்சிறுமியின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: பேரளி கிராமத்தில் சூறை காற்றுடன் பெய்த கனமழை..!

ABOUT THE AUTHOR

...view details