தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி: 7 ஆண்டுகளாக தனி ஆளாக போராடும் 70 வயது மூதாட்டி - பெரம்பலூர் 70 வயது மூதாட்டி நல்லம்மாள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி நல்லம்மாள் ஏரி வரைபடத்துடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி

By

Published : Nov 16, 2021, 4:35 PM IST

Updated : Nov 17, 2021, 11:10 AM IST

பெரம்பலூர்மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, 7 ஆண்டுகளுக்கு மேலாகத் தனி ஆளாகப் போராடும் 70 வயது மூதாட்டி ஏரி வரைபடத்துடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நன்னை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மனைவி நல்லம்மாள் (வயது70), இவர் இன்று (நவ.16) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார்.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றகோரி மூதாட்டி மனு

அதில், “நன்னை கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கண் துடைப்பாக சில ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டுச் சென்றனர்.

எனவே எங்கள் பகுதிக்கு ஆட்சியர் நேரில் வந்து ஏரியைப் பார்வையிட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தர்.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றகோரி மூதாட்டி மனு

இதனைத் தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த அப்பகுதியின் வரைபடத்தை மாவட்ட ஆட்சியருக்குக் காண்பித்து விளக்கினார்.

நன்னை கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனி ஆளாய் போராடும் 70 வயது மூதாட்டியின் முயற்சியை அனைவரும் பாராட்டினார்கள். இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: MK Stalin : ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்; சாலைகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

Last Updated : Nov 17, 2021, 11:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details