தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கும் காரணத்தினால், வெங்காயமும் தற்போது திருடு போக ஆரம்பித்துள்ளது.
ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு! - onion theft at Perambalur
பெரம்பலூர்: விவசாயி வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருடியவர்கள் பற்றி காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கூத்தனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நடவு பணிக்காக வாங்கி வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சின்னவெங்காயத்தை நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் .
இதனையடுத்து, வெங்காயத்தை பறிகொடுத்த விவசாயி முத்துகிருஷ்ணன் பாடாலூர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். தற்போது, காவல்துறையினர் வெங்காயம் பறிபோனதை பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:செல்ஃபோன் கடையில் ரூ. 1லட்சம் திருட்டு!