பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவர் கார்த்திகை பட்டத்தில் விதைப்பு பணிக்காக தனது வயலில் உள்ள வெங்காய கொட்டகையில் 300 கிலோ சின்ன வெங்காயத்தை ஐந்து மூட்டைகளில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றனர்.
300 கிலோ சின்ன வெங்கயாம் திருட்டு! - சின்ன வெங்காயம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே விதைப்பு பணிக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ சின்ன வெங்காயத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
300 கிலோ சின்ன வெங்கயாம் திருட்டு!
இன்று (நவ. 21) வயலுக்குச் சென்று பார்க்கும்போது வெங்காயம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.