தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்! - சுகாதரத்துறையினர்

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகே குடோனில் மறைத்து வைக்கப்பட்ட 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குடோனுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குட்கா

By

Published : Feb 9, 2019, 11:40 PM IST

பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சௌமியா சுந்தரி தலைமையிலான அதிகாரிகள், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிவாசல் தெருவில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு பொட்டலங்கள், குட்கா, புகையிலை ஆகியவற்றை கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

குட்கா

இதையடுத்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை பாதுகாப்பு அலுவலர் சௌமியா சுந்தரி பறிமுதல் செய்தார். இதன்பின்னர், தடை செய்யப்பட்ட பொருள்களை கடைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடோன் நிர்வாகிகளிடம் எச்சரித்தார். மேலும், குட்கா, புகையிலை பொருட்களைபதுக்கி வைத்திருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details