புரெவி புயல், பருவ மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது, இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் தற்போது 15 ஏரிகள் நிரம்பி உள்ளன.
தொடர் மழை எதிரொலி: பெரம்பலூரில் 15 ஏரிகள் நிரம்பின - Puravi cyclone
பெரம்பலூர்: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன, தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் தற்போது 15 ஏரிகள் நிரம்பியது.
Breaking News
நிரம்பியுள்ள ஏரிகள் விவரம்:
- அரும்பாவூர் பெரிய ஏரி
- அரும்பாவூர் சின்ன ஏரி
- வடக்கலூர் ஏரி
- கீரனூர் ஏரி
- பெண்ணகொணம் ஏரி
- வயலூர் ஏரி
- கீழப்பெரம்பலூர் ஏரி
- வடக்கலூர் அக்ரஹாரம் ஏரி
- அகரம்சிகூர் ஏரி
- ஒகளூர் ஏரி
- தழுதாழை ஏரி
- கை பெரம்பலூர் ஏரி
- கிழுமத்தூர் ஏரி
- வெண்பாவூர் ஏரி
- பெருமத்தூர் ஏரி
இந்த 15 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது, 10க்கும் மேற்பட்ட ஏரிகள் 50 சதவீத கொள்ளளவை எட்டி வருகிறது.