உலகம் முழுவதும் பிப்ரவரி 4ஆம் தேதி சர்வதேச புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நினைவுறுத்தும் வகையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி இப்பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது.