கரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்களுக்கு வேலையின்மை ஏற்பட்டு போதிய வருமானாம் இல்லாததால், இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் கடனை வசூலிக்க மூன்று மாதங்களுக்கு தடை விதித்திருந்தது.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை திருப்பி கேட்பதாக பெண்கள் புகார்! - பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கரோனா ஊரடங்கில் கடனை திருப்பி செலுத்தக்கோரி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் செயல்பட்டுவரும் எல்&டி மைக்ரோ பைனான்ஸ், உஜ்ஜீவன் பைனான்ஸ், மதுரா பைனான்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கரோனா ஊரடங்கால் போதிய வருமானமின்றி இருக்கும் சூழலில், தற்போது கடனை செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் தங்களை வற்புறுத்திவருவதாக திருச்செங்கோடு அடுத்துள்ள கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.