நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய தொழில் முட்டை மற்றும் கோழி வளர்ப்பு. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 4 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு தினமும் 3.75 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக சத்துணவு திட்டத்திற்கு முட்டை அனுப்புவது நிறுத்தம், கோழி இறைச்சி விற்பனை மந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவிவந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக முட்டைகள், கோழி இறைச்சி விற்பனை சீராகிவருகிறது.
இந்த நிலையில் கோடை வெப்பத்தால் ஏராளமான கோழிகள் உயிரிழந்து வருகின்றன. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பண்ணையின் மேற்கூரையிலும், கோழிகள் மீதும் தண்ணீர் தெளித்து வெப்பத்தை குறைத்து வருகின்றனர். அதில் கோழிகளுக்கு ஸ்பிரே மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டுவருகிறது.
நாமக்கல் பண்ணைகளில் கோழிகளுக்கு ஸ்பிரே மூலம் தண்ணீர் - நாமக்கல் முட்டை விலை
நாமக்கல்: கோழி பண்ணைகளில் கோடை வெப்பத்தில் இருந்து கோழிகளை காக்க ஸ்பிரே மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டுவருகிறது.
namakkal-poultry-farms
இதையும் படிங்க:உச்சத்தைத் தொட்ட இறைச்சியின் விலை