தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பையால் சூழப்பட்ட ஆழ்த்துளைக் கிணறு - மூடக் கோரிக்கை! - ஆழத்துளைக் கிணறுகள்

நாமக்கல்: குப்பையால் சூழப்பட்ட ஆழ்த்துளைக் கிணற்றை முறையாக மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

namakkal

By

Published : Oct 30, 2019, 3:14 AM IST

Updated : Oct 30, 2019, 3:47 AM IST


நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட துபான் குமாரசாமி தெருவில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக நகராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அதில் இரண்டாண்டுகள் குடிநீர் கிடைத்த நிலையில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. பணிகள் முழுமையடையாததால் அதனை நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.

இதனால் ஆழ்துளைக் கிணறு பயன்பாடாற்று போனது. இதனை முறையாக மூடாமல் விட்டதால் அதன்மீது பொதுமக்கள் குப்பையை கொட்டி மேடாக்கிய நிலையில் போர்வெல்லின் மேற்பகுதி மட்டும் மண்ணால் மூடப்பட்டு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையோரத்தில் உள்ளது. இதனை முறையாக மூட பலமுறை நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் இதுவரை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்த்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துள்ள நிலையில் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்..

வெறும் குப்பைகளால் மட்டும் மூடிகிடக்கும் ஆழ்த்துளைக் கிணறு

இதையும் படிங்க: பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

Last Updated : Oct 30, 2019, 3:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details