நாமக்கல்:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் திமுக சார்பில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டும்; காங்கிரஸ் கட்சிக்கு 1 வார்டும் மீதமுள்ள 36 வார்டுகளில் திமுகவும் வேட்பாளர்களை களமிறக்கியது.
இந்நிலையில், 16ஆவது வார்டு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் ஷேக் நவீத் என்பவர் வேட்புமனுதாக்கல் செய்தார். இதனால் அதிருப்தியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் சரவணன் என்பவரும் சுயேச்சையாக மனுதாக்கல் செய்திருந்தார்.
இன்று(பிப்.08) வேட்பு மனுவாபஸிற்குப் பிறகு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அதில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்திருந்த சரவணனுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது.