இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 135 கிளைச் சங்கங்களுடன் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இயங்கிவருகிறது. இந்நிலையில், சில லாரி உரிமையாளர்கள் வரும் ஜூலை 22ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
'ஜூலை 22ஆம் தேதி லாரிகள் வழக்கம் போல் இயங்கும்' - குமாரசாமி
நாமக்கல்: வரும் ஜூலை 22ஆம் தேதி லாரிகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
trucks-will-run-as-usual-july-22
அதற்கும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே அன்று வழக்கம் போல் லாரிகள் இயங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையைக் குறைத்து, காலாண்டு வரியை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்