தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடியின மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை! - Namakkal district news

நாமக்கல்: பழங்குடியின மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

By

Published : Aug 24, 2020, 6:58 PM IST

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் செல்வம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "தாங்கள் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியில் தங்கி விவசாயம் செய்து வருகிறோம்.

எங்களது மகள் திவ்யாவிற்குச் சாதிச் சான்று கேட்டு 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.

தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுவருகிறது. இதனால் எனது மகளின் உயர்கல்வி படிப்பு பாதிக்கப்படுகிறது. ஆகவே அவருக்கு பழங்குடியின சான்று அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details