தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்: போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு! - juice

நாமக்கல்: வெயிலின் தாக்கத்தை தாங்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

போக்குவரத்து காவலர்

By

Published : Mar 14, 2019, 9:58 PM IST

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதிலும் நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை விட அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து காவலர்கள் வெயிலின் தாக்கத்தால் பணி செய்ய இயலாமல் சோர்ந்து விடுகின்றனர். இதனால் போக்குவரத்தை சீர் செய்ய மாவட்ட காவல்துறையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் போக்குவரத்து துறைக்கு ஆள் பற்றாக்குறை காரணமாக ஒரு சில போக்குவரத்து காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் பணி சுமை ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் அவர்கள் சிறிது நேரத்திலேயே பணி செய்ய இயலாமல் சோர்ந்து விடுகின்றன. இதனை தவிர்க்க நாமக்கல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி தலைமையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பழச்சாறானது தினந்தோறும் வழங்கப்படும் என மாவட்ட துணை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். இதனால் போக்குவரத்து காவலர்கள் உத்வேகத்துடன் போக்குவரத்தை சீர் செய்ய முடியும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.


இதுபோன்று கோடைகாலத்தில் சோர்வின்றி பணியாற்ற மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் போக்குவரத்து காவலர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என கேரிக்கைவைக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details